பந்தை சேதப்படுத்திய சர்ச்சைக்குள் சிக்கிய ஜடேஜா! வைரலாகும் காணொளி
இந்தியா - அவுஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே சர்ச்சை தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா அற்புதமான மறுபிரவேசம் செய்த சற்று நேரத்திலேயே பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அவரது விரலில் எதையோ தடவியுள்ளதினை கவனித்த அவுஸ்திரேலிய ஊடகங்களும் கிரிக்கெட் அணி இரசிகர்களும் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருப்பினும், ஜடேஜா தனது விரலில் வலி நிவாரணி கிரீம் தடவிக்கொண்டிருந்ததாக இந்திய அணி விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில் கிரிக்கெட் சட்டங்களின்படி, பந்துவீச்சாளர் தனது கைகளில் எந்த வகையான பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு நடுவரின் அனுமதியைப் பெற வேண்டும். அதை அவர் பயன்படுத்துவதால் பந்திற்கு எவ்வாறான பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The video shows Ravindra Jadeja applying ointment to a sore finger, not tampering with the ball.#India #indiaaustraliatest #AUSvsIND #Australia pic.twitter.com/kGLee9o5sD
— Papabook News (@PapabookNews) February 9, 2023
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri