பஹ்ரைன் செல்ல நீதிமன்ற அனுமதிக்கோரிய ஜாக்குலின்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலங்கையில் பிறந்த பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு பஹ்ரைன் செல்வதற்கான அனுமதியை வழங்க புதுடில்லி பட்டியாலை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதனையடுத்து ஜாக்குலின் அனுமதிக்கோரிய மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டார் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
200 கோடி ரூபாய்
நாளை 23 முதல் எதிர்வரும் ஜனவரி 5 வரை தனது தாயைப் பார்க்க பஹ்ரைன் செல்ல அவர்,கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதியை கோரியிருந்தார்.
ஏற்கனவே மோசடியாளர் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து சுமார் 200 கோடி ரூபாய் பெறுமதியான பரிசுகளை பெற்றுக்கொண்டதன் மூலம், அவரின் மோசடியில் பங்கேற்ற குற்றச்சாட்டு ஜாக்குலின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம்
இந்தநிலையில் இதுபோன்ற ஒரு முக்கியமான கட்டத்தில்,பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது.
மனுதாரர், வெளிநாட்டு பிரஜை என்ற அடிப்படையில் அவர், எந்த நாட்டில் இருந்தும் தமது தொழிலை மேற்கொள்ளமுடியும். எனவே அவருக்கு பஹ்ரைன் செல்வதற்கான அனுமதி வழங்கப்படக்கூடாது என்று குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமுலாக்கம் முகவரகம் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்தே நீதிமன்றம் தமது உத்தரவை பிறப்பித்தது.
அத்துடன் இந்த வழக்கை, ஜனவரி 6ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
