இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..
விசா, கடவுச் சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான அவுட்சோர்சிங் சேவை வழங்குநரான IVS லங்காவின் செயற்பாடுகளை, 2025, ஒக்டோபர் 31ம் திகதியுடன் நிறுத்தபோவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நவம்பர் 3, 2025 முதல், அனைத்து விசா, கடவுச் சீட்டு மற்றும் தூதரக தொடர்பான சேவைகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (கொழும்பு), உதவி உயர் ஸ்தானிகராலயம் (கண்டி) மற்றும் இந்திய துணைத் தூதரகம் (யாழ்ப்பாணம்) ஆகியவற்றை நேரடியாகக் கையாளும் என தெரிவிக்கப்படுள்ளது.
IVS லங்காவின் செயற்பாடுகள்
மேலும் விண்ணப்பதாரர்களுக்காக ஒரு புதிய நியமன மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வழிகாட்டுதலுக்காக விண்ணப்பதாரர்கள் (https://www.hcicolombo.gov.in) ஐப் பார்வையிட வேண்டும் எனவும் அல்லது கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தந்த அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் உயர் ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.