ஐரோப்பிய நாடொன்றில் பெருமளவு இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு
இத்தாலியில் பெருமளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையால் இத்தாலி தவித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாண்டு கால அடிப்படையில் வெளிநாட்டவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இடம்பெயர்வு கொள்கை
2026–2028 ஆம் ஆண்டுக்கான இடம்பெயர்வு ஒதுக்கீட்டில் மூலம் அதன் பொருளாதாரத்தை மாற்றும் நோக்கில் புதிய இடம்பெயர்வு கொள்கையை வெளியிட்டுள்ளது.
ஒழுங்கற்ற இடம்பெயர்வைத் தடுக்கும் அதே வேளையில் தொழிலாளர் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப இடம்பெயர்வு ஓட்டங்களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கை, விரிவடைந்து வரும் பணியாளர்களை நம்பியுள்ள துறைகளுக்கு ஒரு முக்கியமான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவித்தன.
இத்தாலியின் வயதான மக்கள் தொகை மற்றும் பல தசாப்தங்களாக குறைந்த பிறப்பு விகிதங்கள் காரணமாக கட்டுமானம், விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன.
தொழில்வாய்ப்பு வீசா
இதன் காரணமாக 2026–2028 பருவ காலத்தில் சுமார்500,000 புலம்பெயர்ந்தோரை உள்ளீர்க்க இத்தாலி திட்டமிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் 164,850 புலம்பெயர்ந்தோரையும், 2027 இல் 165,850 புலம்பெயர்ந்தோரையும், 2028 இல் 166,850 புலம்பெயர்ந்தோரையும் ஏற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமானம், சுகாதாரம் மற்றும் திறமையான தொழில்களுக்கு ஆண்டுதோறும் 76,850 தொழிலாளர்களையும், விவசாயம் மற்றும் சுற்றுலாவுக்கு 88,000 - 90,000 தொழிலாளர்களையும், முதியோர் - ஊனமுற்றோர் பராமரிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 13,600 -14,200 வீட்டு உதவியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களையும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.