ஐரோப்பா அனுப்புவதாக பாரிய நிதி மோசடி - நபரை தேடும் பொலிஸார்
இத்தாலியில் இசைக் குழுவில் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் 3,750,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் மோசடியாளர் மீது சிலாபம் பிரிவு மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆனவிலுந்தாவ, நல்லதரங்கட்டுவ மற்றும் செங்கல்ஓய ஆகிய பகுதிகளில் வசிக்கும் இரண்டு நபர்கள் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
ஜா-எல, பகுதியை சேர்ந்த ஒருவர், பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் அவரை அடையாளம் கண்டதாக தெரியவந்துள்ளது.
பாரிய நிதி மோசடி
அதற்கமைய பாதிக்கப்பட்ட இருவரும் பணம் கொடுத்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

எனினும் சந்தேக நபர் வாக்குறுதியளித்தற்கமைய, இத்தாலியில் உள்ள இசைக் குழுவில் வேலை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கொடுத்த பணத்தை கோரிய பிறகும் எந்த பதிலும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam