இத்தாலி வரலாற்றில் முதல் முறையாக பிரதமராகும் பெண்!: வெளியான அறிவிப்பு
ஜியோர்ஜியா மெலோனி இத்தாலியின் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.
பொருளாதார நெருக்கடி
அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர்.
இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை இராஜினாமா செய்தார்.
தேர்தல் அறிவிப்பு
அதைத்தொடர்ந்து, இத்தாலிக்கு புதிய பிரதமரை தேர்வு செய்ய பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 600 உறுப்பினர்களை கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது.
அதில் சுமார் 64% வாக்குகள் பதிவாகின. அவற்றின் முடிவில் ஜியார்ஜியா மெலோனி தலைமையிலான தேசிய சகோதரத்துவ கட்சி 26% வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.
இக்கட்சி தீவிர வலதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இத்தாலியில் தீவிர வலதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைவது இதுவே முதல் முறையாகும்.
யார் இந்த ஜார்ஜியா மெலோனி
45 வயதான ஜார்ஜியா மெலோனி ' தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார்.
2008 இல், பெர்லுஸ்கோனி பிரதம மந்திரியாக இருந்த போது மந்திரிசபையில் ஜார்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார்.
இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் வேட்பாளராக அவர் உயர்ந்துள்ளார்.
இத்தாலிய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் அதிபரை பிரதமரே தேர்வு செய்வார் என்பதால் முறையான அறிவிப்பு வெளியாக ஒரு சில நாட்களாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
