ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை

United Nations Sri Lanka ITAK
By Rakesh Aug 28, 2025 10:52 AM GMT
Report

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் வரவிருக்கும் அறுபதாவது கூட்டத் தொடர், இலங்கை தொடர்பாக 'தமிழ்த் தேசியப் பிரச்சினையை' முறையாகக் கையாளும் அளவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று கடிதம் மூலம் கோரியிருக்கின்றது.

கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் வெளிநாட்டில் இடம்பெற்ற அதிரடிக் கைது!

இலங்கை வரலாற்றில் இன்டர்போலின் உதவியுடன் வெளிநாட்டில் இடம்பெற்ற அதிரடிக் கைது!

நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் 

கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், சாணக்கியன் இராசமாணிக்கம், ச.குகதாசன், து.ரவிகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் இதில் ஒப்பமிட்டுள்ளனர். 

ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை | Itak Request To Un Member States

'இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் - HRC 57/1' என்ற தலைப்பிலான இந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:-

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பாக செப்டம்பர் 2024 இல் 57 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேற்படி 57/1 தீர்மானத்தின் காலம் செப்டெம்பர் 2025 இல் 60 ஆவது அமர்வோடு முடிவடைகின்றது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட - தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற - முதன்மை அரசியல் கட்சி நாங்கள்தான். (1949 இல் தொடங்கப்பட்டதிலிருந்து சமஷ்டிக் கட்சி என்று நம் கட்சி அழைக்கப்படுகின்றது). அந்த வகையில் எங்கள் மக்களின் சில தீவிரமான கவலைகளை உங்கள் முன் வைப்பது எங்கள் கடமையாகக் கருதுகின்றோம்.

வரலாற்று ரீதியாக நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நிலை கொண்டு தமிழ் மக்கள் இலங்கையில் முற்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்,

நாங்கள் எங்களுடைய சொந்த மொழி மற்றும் கலாசாரத்தைக் கொண்ட வேறுபட்ட மற்றும் தனித்துவமான மக்கள்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் இந்துக்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். அதே நேரத்தில் சிங்களவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள்.

காணாமல் போனவர்கள் குறித்து விசாரித்த

மிக சமீபத்தில் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. 150 எலும்புக்கூட்டு எச்சங்கள் - அவற்றில் 96 வீதமானவை ஒட்டுத் துணிகள. கூட இல்லாமல் - ஒரு சிறிய சதுக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை | Itak Request To Un Member States

அந்தப் பகுதியை ஸ்கேன் செய்ததில் இன்னும் பல உடல்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளமை தெரியவந்தது.

தண்டனை பெற்ற ஒரு சிப்பாய் 1999 இல் நீதிமன்றத்தில் இராணுவத்தால் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்தினார்.

1990களின் நடுப்பகுதியில் அந்தப் பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைகளும் உள்ளன.

இவை அனைத்தும் இனப்படுகொலை செய்யும் நோக்கம் உண்மையில் இருந்தது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன மற்றும் மேலும் அதற்கு வலுச் சேர்க்கின்றன.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களின் அளவையும், அவற்றின் விஸ்தாரத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு, மேற்கண்ட விஷயங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த விஷயத்தை சர்வதேச கவனத்தின் கீழ் வைத்திருப்பதில் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் மெச்சுகின்றோம்.

வரவிருக்கும் 60 ஆவது அமர்வில்

பொறுப்புக் கூறல் விவகாரத்தில் உள்ளூர் வழிமுறைகள் மூலம் முன்னேற்றம் இல்லாதமை குறித்து உயர் ஆணையர் (தமது அறிக்கையில்) விமர்சன ரீதியாகக் கருத்து தெரிவித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட சமூகம் இந்த அறிக்கை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான உள்ளூர் வழிமுறைகளை - அவை ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக பயனற்றவை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும் - அவற்றை நம்பியிருப்பதாகத் தோன்றுவது குறித்து ஏமாற்றமடைகின்றது.

ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை | Itak Request To Un Member States

காணாமல் போனோர் அலுவலகம் போன்ற அமைப்புகளில் சர்வதேச பங்கேற்புக்கான யோசனை போன்றவை கூறப்பட்டுள்ளன.

எனவே அத்தகைய ஈடுபாட்டை பரிந்துரைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்றவை எங்களுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தரும் சில ஏற்பாடுகளாகும். வரவிருக்கும் 60 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தீர்மானம், 'தமிழ் தேசியப் பிரச்சினையை' முறையாகக் கையாளும் அளவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போர்க்குற்ற வழக்கை அன்று தடுத்து நிறுத்தி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஜயதாச ராஜபக்ச

போர்க்குற்ற வழக்கை அன்று தடுத்து நிறுத்தி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஜயதாச ராஜபக்ச

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US