முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவித ஒப்பந்தங்களும் இல்லை: தமிழரசு கட்சி எம்.பி விளக்கம்
முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவித ஒப்பந்தங்களும் திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(24.03.2025) மாலை நடைபெற்ற ஊகடவியளலார் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தமிழரசுக் கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு வழங்கப்படும் என வதந்திகள் கூறப்படுகின்றன.
எந்தவித ஒப்பந்தங்களும் இல்லை
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூட சில கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார். இது உண்மையற்ற விடயம்.
நாங்கள் தனித்து நின்று போட்டியிடுவது என்றும், விரும்பினால் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் இணைந்து பயணிக்கலாம் என்றும் கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம்.
அதற்கு அப்பால் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கொள்ளலாம் எனவும் நாங்கள் முடிவெடுத்திருந்தோமே தவிர எந்தவிதமான ஒப்பந்தங்களும் எந்த விதமான திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
