செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி ஆட்சியமைக்கும்! சத்தியலிங்கம்
வவுனியா- வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர், உபதவிசாளர் தெரிவு குறித்து தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று(24) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ஜக்கியமக்கள் சக்தி),இலங்கை தமிழரசுக்கட்சி,ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ரெலோ(ஜனநாயக தேசியகூட்டணி) ஆகிய கட்சிகளிற்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் செட்டிகுளம் பிரதேசசபையில்ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம்.
தவிசாளர் தெரிவு
அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்படவுள்ளதுடன், உபதவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேசசபையின் ஆட்சியை எமது கூட்டு நிச்சயமாக கைப்பற்றும். பலதேவைகள் அந்த பிரதேசத்தில் இருக்கின்றது. அந்த தேவைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை இந்த கட்சிகள் கூட்டாக மேற்கொள்ளும்.
பொருத்தமான முடிவு
வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெத்துள்ளோம். அந்த சபையின் தவிசாளர் யார் என்பது தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளது. அவற்றை நாம் ஆராய்ந்து பொருத்தமான முடிவினை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துமுகமது, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
