அநுரவின் அரசாங்கம் விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு
2025 ஜூன் 30 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தனது நிதி உத்தி குறித்து சிறப்பு அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அவைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவா அல்லது பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயரத்னவா விடுப்பார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஒத்திவைப்பு விவாத
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிதி நிலைமை குறித்து ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி விவாதம் அன்றைய தினம் முற்பகல் 10:00 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2025 ஜூலை 9ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றம் மற்றொரு விவாதத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri