நாட்டு மக்களுக்கு மீண்டும் பேரிடியாக மாறியுள்ள விடயம்
சந்தையில் பால்மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
இதன் காரணமாக நுகேகொட மிரிஹானவிலுள்ள உள்ளூர் பால்மா விற்பனை நிலையத்துக்கு எதிரே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று பால்மா கொள்வனவு செய்துள்ளதாகவும்,சிலர் கிடைக்கப்பபெறாமையினால் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த நாட்களில் பால்மா வழங்குவதற்கான நடைமுறை பின்பற்றப்பட்ட போதிலும், விற்பனை நிலையத்தில், பால்மா கொள்வனவு செய்வதற்கு டோக்கன் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்ளூர் பால்மா கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை தவிர்க்கும் வகையில் பொலிஸாரால் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



