காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை: டக்ளஸ் தேவானந்தா
யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கின்றதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
13வது திருத்த சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். என்னை துரோகியாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த சட்டத்தினை கோரி நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன் பிடியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் வகையிலும் எதிர்காலத்தில் வாகரையில் மீன்பிடி தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalendiran) ஆகியோரின் அழைப்பினையேற்று இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வாகரை மீன்பிடி திணைக்கள காரியாலய வளாகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு விசேட சந்திப்பில் மீனவர்களுடன் கலந்து கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் (K. Karunakaran) உட்பட பலர் கலந்து கொண்டனர்.











ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri