இந்தநாடு சீன காலணியாக மாறுவதனை ஏற்க முடியாது – முருத்தட்டுவே ஆனந்த தேரர்
இந்த நாடு சீன காலணியாக மாறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அபயராமயவின் விஹாராதிபதி முருத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரிற்கோ அல்லது முதலீடுகளுக்கோ எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாட்டின் எந்தவொரு சொத்தையும் வெளிநாடுகளுக்கு வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை விற்ககோ, குத்தகைக்கு விடவோ அல்லது நாட்டுக்கு பங்கம் ஏற்படக்கூடிய தீர்மானங்களை எடுக்கவோ அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யார் என்ன சொன்னாலும் இந்த நாட்டில் தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சி பீடம் ஏற்றியது தாமே எனவும் அதனை யாராலும் மறுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபராயமயவே மொட்டு கட்சியினதும் தற்போதைய ஆட்சியாளர்களினதும் ஆரம்பம் எனவும் அராசங்கம் நன்றி மறந்து விட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் நன்றி மறப்பது ஓர் கலாச்சாரமாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டுக்கு விரோதமான முறையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையான வகையில் செயற்பட்டதனாலேயே தாம் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியாளர்கள் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை கொண்டு வந்தால் அதனை இரகசியமாக கொண்டு வராது மக்களுடன் கலாந்தாலோசித்து கொண்டு வரப்பட வேண்டுமென முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபயாராமயவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
