யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - மீனவ பிரதிநிதிகள்
யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ். மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் எதிர்நோக்கும் யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என யாழ்.பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும், யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட மீனவ சம்மேளன பிரதிநிதியான வர்ணகுலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்திலுள்ள தீவகங்களில் 3 தீவுகளை வெளிநாடுகளுக்கு மின்சார வசதிகள் செய்வதற்காக வழங்குவது தொடர்பாக அறியக்கிடைக்கிறது.
அது எந்த நிறுவனமாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி அவர்களுக்கு வழங்குவதை யாழ்.மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளாக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஏனெனில் சீனாவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி அங்கே வந்து ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள்.
எங்களுடைய மீனவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுவார்கள். இந்தியாவிடம் வழங்கினாலும் அதுவும் நமக்குப் பாதகமாகவே இருக்கும்.
அவர்கள் வந்து இங்கே ஆதிக்கம் செலுத்தும்போது, அது இன்னும் பாதகமானதாகவே அமையும். இப்போதே இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காரணமாக அவர்கள் வந்து இங்கு சண்டித்தனம் விட்டு தொழில் செய்கின்ற நிலைமைகள் காணப்படுகின்றது.
எனவே அவர்கள் இந்த தீவுகளில் குடிகொண்டால் அது இன்னும் பாதகமாகவே அமையும்.இந்த தீவகங்களை ஒருபோதும் வெளிநாடுகளுக்கு வழங்கும் தீர்மானத்தை அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட மீனவ சமூக பிரதிநிதியான அ.அன்னராசா,
யாழ்.மாவட்டத்தின் தீவகங்களைச் சீன நிறுவனத்திடத்தில் மின்னுற்பத்திக்காக வழங்குகின்ற செயற்பாட்டை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே இலங்கையினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் எங்களுடைய பிரதேசத்திலே நாங்கள் சுதந்திரமாகத் தொழிலைச் செய்து நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி வேறு நாடுகளுக்குத் தீவுகளை வழங்குகின்ற செயல்பாட்டை தடுத்து நிறுத்தி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
