யுக்ரென் மீது படையெடுத்தால், ரஸ்யா பேரழிவை சந்திக்கும்- அமெரிக்கா எச்சரிக்கை!
யுக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை நீடிக்கிறது.
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியதை அடுத்தே இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையிலேயே யுக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்கா,ரஸ்யாவுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் யுக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை அதிகரித்து வருகிறது.
அதிநவீன ஆயுதங்கள், போர் தளபாடங்களுடன் 1 லட்சத்திற்கும் அதிகமான படையினர் யுக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே, யுக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதற்கிடையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் நேற்று யுக்ரைனுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில், ரஷியா-யுக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளைமாளிகையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,
யுக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் ரஸ்யாவே ஏற்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.










CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்... விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி Cineulagam
