வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Shavendra Silva Colombo COVID - 19 Metting
By Murali Jul 02, 2021 09:58 PM GMT
Report

முறையான பீசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்று என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கோவிட் - 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் கோவிட் - 19 தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையில் தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், பிரதேசங்களை தனிமைப்படுத்துதல், வெவ்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான கோரிக்கைகள், தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் திட்டங்கள், வெளிநாட்டிலிருப்பவர்களின் வருகை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள், பிசிஆர் சோதனைகள் மற்றும் ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பெரிதும் ஆராயப்பட்டன.

முறையான பீசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்றும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவோர் சிலர் அண்டிஜன் பரிசோதனைகளை மாத்திரமே செய்துக்கொண்டுள்ளனர் எனவும், இனிவரும் நாட்களில் அவர்கள் முறையான பிசிஆர் அறிக்கையுடனேயே நாடு திரும்ப வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் அங்கீகிக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரமே பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிரம்ப ஆரம்பித்துள்ளமையால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 2021 ஜூன் வரையிலான நிலைமை மற்றும் இலங்கையின் மூலோபாயம் என்பன தொடர்பில் விளக்கமளித்துடன் “வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்” என்றும் எடுத்துரைத்தனர்.

அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், புதிய வைரஸ் வகைகள், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா பகுதிகளிலிருந்து உருவான கொத்தணிகள், புதிய தரவுகள், புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகளை சமர்பித்து 6 நாட்களில் 2000 க்கும் குறைவான நோயாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியசாலைகள் , இடைநிலை பராமரிப்பு நிலையங்கள், இறப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

அத்தோடு டெல்டா மாறுபாடு வைரஸ் பரவி வருகின்றமை தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US