இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் விடயம்!
இந்த வருடத்தின் இரண்டு வாரங்களில் 3,918 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் ஷிலந்த செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தின் முதல் 02 வாரங்களுடன் ஒப்பிடுகையில் டெங்கு தொற்று வீதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நுளம்பு பெருகும் இடங்களை இல்லாதொழித்து டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவுமாறும் அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
