பாலஸ்தீனிய மக்களுடன் ஈழத்தமிழ் மக்கள் மனதளவிலாவது துணை நிற்க வேண்டும் : பொ. ஐங்கரநேசன்

Sri Lanka Politician Sri Lankan political crisis Israel Israel-Hamas War
By Kajinthan Oct 19, 2023 11:21 AM GMT
Report

இலங்கையில் இனவழிப்புக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வரும் ஈழத்தமிழ் மக்கள் இனவழிப்புக்கு ஆளாகும் பாலஸ்தீனிய மக்களுடன் மனதளவிலாவது துணை நிற்க வேண்டும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

காசா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் தாக்குதல் தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு

காசாவின் மீது கொடூர யுத்தம்

காசாப் பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுத்ததையடுத்து இஸ்ரேல் காசாவின் மீது கொடூரமான யுத்தமொன்றை ஆரம்பித்திருக்கிறது.

பாலஸ்தீனிய மக்களுடன் ஈழத்தமிழ் மக்கள் மனதளவிலாவது துணை நிற்க வேண்டும் : பொ. ஐங்கரநேசன் | Istrai Hamas War Hospital Attacked Aingaranesan

மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் என்று பாராது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை வீசி காசா முழுவதையுமே துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாகத் தாக்கி வருகிறது. இந்த யுத்தம் ஹமாஸ் இயக்கத்தினரைச் சாட்டாக வைத்து பாலஸ்தீனியர்களைக் கருவறுக்கும் இனவழிப்பு யுத்தம் ஆகும். 

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா நிலப்பரப்பை இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு பலவந்தமாக ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பில் புத்தர் சிலையை காணவில்லை: பொலிஸாருடன் சுமனரதன தேரர் வாக்குவாதம் (Video)

மட்டக்களப்பில் புத்தர் சிலையை காணவில்லை: பொலிஸாருடன் சுமனரதன தேரர் வாக்குவாதம் (Video)

பாலஸ்தீன விடுதலைப் போராளி

காசா வெறும் 365 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. உலகின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக விளங்கும் இங்கு 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினராவர்.

பாலஸ்தீனிய மக்களுடன் ஈழத்தமிழ் மக்கள் மனதளவிலாவது துணை நிற்க வேண்டும் : பொ. ஐங்கரநேசன் | Istrai Hamas War Hospital Attacked Aingaranesan

இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் என்னும் குறுகிய நிலப்பரப்பில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் திட்டமிட்டுச் சிக்கவைத்து அவர்களைக் கொத்துக்குண்டுகள் வீசி அழித்தொழித்ததைப் போன்றே இன்று மிகக்குறுகிய காசா நிலத்துண்டில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஐனநாயக வழிமுறைகளிலிருந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணாமித்த போது தமிழ் விடுதலை இயக்கங்களில் பலர் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இதைத் தங்களின் பெருமையாகவும் வலிமையாகவும் சிலாகித்தவர்கள் இன்றும் எம்மத்தியில் உள்ளனர்.

பாலஸ்தீனியர்களிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதை நாம் எவ்வாறு மறக்கவியலாதோ, அதே போன்று இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவினரின் ஆலோசனையின் பேரில் தமிழ் மக்களை இலங்கை அரசு தாக்கி அழித்ததையும் நாம் மறந்துவிடலாகாது. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்காக நாம் குறைந்த பட்சம் தற்போது அனுதாபங்களையாவது வெளிப்படுத்தாதுவிடின் வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்தது கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றம்

விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்தது கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றம்

மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US