மாகாண சபைத் தேர்தல் முறையில் சட்ட சிக்கல்கள் : கலந்துரையாட அமைச்சு தீர்மானம்
மாகாண சபைத் தேர்தல் முறையில் தற்போதைக்கு முன்னெழுந்துள்ள சட்டச் சிக்கல் குறித்து கலந்துரையாட உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் மாகாண சபைகள் பயன்பாட்டில் இன்றி, ஆளுனர்களின் அதிகாரத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்கி வருகின்றன.
பதிவுபெற்ற அரசியல் கட்சிகள்
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளது.
எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தல்கள் தொடர்பிலும் எல்லை மறுசீரமைப்பு, தேர்தல் விகிதாசார அல்லது வட்டார முறையில் நடத்தப்படுவதா? அல்லது கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதா போன்ற சிக்கல்கள் தற்போதைக்கு முன்னெழுந்துள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் இலங்கையில் உள்ள பதிவுபெற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனையொன்றை நடத்தி, தீர்மானமொன்றை மேற்கொள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |