க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மற்றுமொரு சிக்கல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விஞ்ஞானப் பாடம் தொடர்பான வினாத்தாளில் மூன்று பல்தேர்வு வினாக்கள் மற்றும் மூன்று கட்டுரை வினாக்கள் தொடர்பாக ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியதாகவும் மதுர விதானகே தெரிவித்தார்.
பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் புள்ளிகள் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வின் போது, இது தொடர்பில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
