மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Shan Sep 13, 2026 09:07 AM GMT
Report

மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும் மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று(13.09.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முயற்சி

மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 63 ஆம் கூட்டத் தொடரில் வாசிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர் ஸ்தானிகர் வோல்கர் டேக்கின் எழுத்து மூலம் அறிக்கையில் மலையகம் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளமைக்கு மலைய சமூக ஆய்வு மையம் தனது நன்றியை தெரிவிப்பதோடு மலையக தமிழர்கள் விடயத்தில் டித்வா பேரிடரை மட்டும் பார்த்திருப்பது கவலையையும் வேதனையையும் அளிப்பதோடு ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றிய இலங்கை பிரதி "மலையக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை இலக்காக கொண்டு அரசாங்கம் முற்போக்காக செயற்பட்டு வருவதாக" குறிப்பிட்டார்.

இது மலையக தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நரித்தன அரசியல் கூற்று என்றே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றம்.

ஆணையாளரின் அறிக்கைக்கேற்ப மலையக தமிழர்களில் டித்வா புயலுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது போன்று உலகம் நினைக்கலாம்.

மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை | Issue Of Upcountry Tamils

ஒட்டு மொத்த மலையக தமிழர்களுக்கு வேறு எந்த விதமான பிரச்சினையும் இல்லாத தொனியே உள்ளது.இது மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தோட்டத் தொழிலாளர்கள் காரணமாகவும், சிங்கள மொழி தெரியாதவர்கள் என்பதாலும், சொந்த நிலம் இல்லாமையினாலும், பெருந்தோட்ட கம்பெனிகளின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாலும், கம்பனி மற்றும் அரசு நிர்வாக மட்டத்திலும் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாதவர்களாக தொடர்ந்தும் உள்ளனர் என்பதுவே உண்மை. இவ்விடயம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

மேலும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் நவீன அடிமைத்தனம் தொடர்பிலான விசேட செய்தியாளர் மலையகத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் பின்னர் 2022 இல் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் "மலையகத் தமிழர்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர்" என ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

அடிமைகளாக இருக்கும் மலையக மக்கள்

அவரின் ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் அவைக்கும் கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அத்தோடு சர்வதேச மன்னிப்பு சபை இவ் வருடம் (2026) ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் "தென் இலங்கையில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர்" எனும் நீண்ட அறிக்கையை வெளியிட்டது.

அதுவும் உண்மையே, ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. வடகிழக்கில் நடந்த யுத்த குற்றங்களையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே. மலையகத் தமிழர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட இரண்டு அறிக்கைகள் உள்ள போதும் அறிக்கையின் உள்ளடக்கம் ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளடக்கப்படாது ஏன்?

நாட்டுக்காக அனைத்து வகையிலும் உழைக்கும் மலையக தமிழர்கள் இந்நாட்டில் இன்னொரு தேசிய இனமாக தமக்கே உரிய இன அடையாளத்தை வளர்த்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களை இலங்கையில் வாழும் இன்னுமொரு இனமாக அல்லது இந்நாட்டின் பிரஜைகளாகவோ மட்டுமல்ல மனிதர்களாகவோ இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையே தொடர்கின்றது என்பதே உண்மை.

மேலும் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றிய இலங்கை பிரதிநிதி மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிடாது மலையக மக்கள் என்றே குறிப்பிட்டார்.

மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை | Issue Of Upcountry Tamils

அத்தோடு "அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முற்போக்காக செயல்படுகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.

முற்போக்கு என்பதற்கு இடதுசாரி சிந்தனை கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதி கொடுக்கும் வரைவிலக்கணம் என்ன? என்று கேட்கின்றோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

53 வருட ஒப்பந்தம்

இந்நிலையில் 2042 ல் முடிய போகும் அரசாங்கத்துக்கும் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்து அதை நீடிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை மலையக தமிழர்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட மலையகம் எனும் தேசத்துக்கும் இடையிலான இரத்த உரிமையை மறுப்பதற்கே அன்றி வேறில்லை.

அது மட்டுமல்ல மலையக தமிழர்களின் ஒரு தொகுதியினரை தொடர்ந்து கம்பெனிகளின் அடிமைகளாகவே வைத்திருக்கத் துடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் கபடத்தையே சுட்டி நிற்கின்றது.

மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை | Issue Of Upcountry Tamils

மேலும் மலையக தோட்ட வீடமைப்பு, மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியினை மையமாகக் கொண்டு நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அதிகார சபையை முடமாக்கிவிட்டு மலையகத்துக்கான புதிய அதிகார சபையை உருவாக்கப் போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அரசியலை மலையகம் முழுவதும் வியாபிப்பதற்கான அதிகார சபையாகவே அமையும். இது மலைய தமிழர்களுக்கு எதிரான இனவாத அதிகார சபையாகவே அமையும். வடக்கு கிழக்கில் மகாவலி அதிகார சபை போன்று சிங்கள பௌத்த பேரினவாதம் மலையகத்திலும் தனது கையை நீட்டுவதற்காக உருவாக்கப்படவே புதிய அதிகார சபை தொடர்பாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

இது மலையக தமிழர்களுக்கு எதிரானது என்பதே எமது நிலைப்பாடு.

மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு

மலையகத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு திட்டத்தைத் தீட்டிக் கொண்டு மலையக தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முற்போக்கான செயற்படுகின்றோம் என்பது மலையக தமிழர்களை மட்டுமல்ல முழு உலகத்தையும் ஏமாற்றுவதற்கேயாகும்.

ஐ.நா மனித உரிமை பேரவை இது தொடர்பாக விழித்துக் கொள்ளாத விடில் இலங்கையில் மலையத் தமிழர்கள் என்போர் இல்லாமல் போய்விடும் அபாய நிலையில் உள்ளது என்பதை எச்சரிக்கையாகவே குறிப்பிடவும் வேண்டும்.

மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை | Issue Of Upcountry Tamils

ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் மலைகயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதோடு, அடுத்த கூட்டத் தொடரில் மலையகத் தமிழர் தொடர்பில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் பேரினவாதத்தின் இன அழிப்பிற்கும் உச்சக்கட்ட இனப்படுகொலைக்கும் நீதி கேட்டு நிற்கும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான நீதி கிட்டாத நிலையில், மலையக தமிழர்களுக்கான நீதி என்பது எட்டா கனியாகவே அமைந்துவிடும்.

இத்தகைய பின்புலத்தில் வடக்கு-கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என ஒடுக்கப்படும் தமிழர் இனங்களாக ஓரணியில் திரல்வதே காலத்தின் கட்டாயம் என்பதை வெளிப்படுத்துகின்றோம்.

பிரபல வர்த்தக நிலைய காட்சியறைகளில் பாதணிகள் மோசடி விற்பனை

பிரபல வர்த்தக நிலைய காட்சியறைகளில் பாதணிகள் மோசடி விற்பனை

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US