பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: தொடரும் குழப்ப நிலை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை ஒன்று கூடவுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அண்மையில் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானிகளும் நேற்று முன்தினம் இரத்து செய்யப்பட்டன
சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானிகளுக்கு எதிராகப் பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், மேற்படி வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, அடுத்த மாதத்துக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.
பல்வேறு கருத்தாடல்
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மேற்படி சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமை தொடர்பாக பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக 1,700 ரூபா சம்பளத்துக்குப் பதிலாக அதனிலும் குறைந்த தொகை ஒன்றுக்கு இணக்கம் எட்டப்படலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், சம்பளத்தொகை தொடர்பாக புதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சம்பள நிர்ணய சபையை ஓகஸ்ட் மாதம் கூட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri