323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் : நாடாளுமன்ற விசாரணைக்குழு கோரும் எதிர்க்கட்சி
துறைமுகத்தில் இருந்து பரிசோதிக்கப்படாமல் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான எதிர்க்கட்சியின் கோரிக்கை தற்போது நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நிலையியற்குழு கூடியபோது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் இருந்து கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்த 323 கொள்கலன்களை எதுவித பரிசோதனையும் இன்றி சட்டவிரோதமாக துறைமுகத்தில் இருந்து வெளியேற்ற அனுமதித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைக்க நாடாளுமன்ற விசேட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டுமென்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மனு நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் ஐந்து நாட்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான நிலையியற்குழுவின் அனுமதியின் பிரகாரம் நாடாளுமன்ற செயற்பாட்டில் உள்வாங்கப்படும்.
குறித்த மனு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அதில் கோரப்பட்டுள்ளவாறான விசேட விசாரணைக் குழுவொன்றை அமைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




