கொழும்பில் சர்ச்சைக்குரிய பாடகரால் இசை நிகழ்ச்சியில் குழப்பம்
கொழும்பில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை கச்சேரியில் இருந்து பிரபல பாடகர்கள் விலகியதை அடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகர் ஒருவரும் குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த நிலையிலேயே, பிரபல பாடகர்கள் இருவரும் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொண்டனர்.
சர்ச்சைக்குரிய குறித்த பாடகர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் மற்றும் இசை காணொளிகளையும் வெளியிட்டிருந்தார்.
பிரபல இளம் பாடகர்கள்
அவரது சில இசை காணொளிகளின் உள்ளடக்கம் மூலம் திருநங்கைகளை கேலி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இலங்கையின் மிகவும் பிரபலமான இரண்டு இளம் பாடகர்களும் தமது நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
அதில், அசல் ஒப்பந்தத்திற்கு மாறாக கச்சேரியை நடத்த முயன்றதன் காரணமாகவே தாம் அதிலிருந்து விலகிக்கொண்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
