இலங்கையின் நாளாந்த கோவிட் தொற்றாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்! உயர் அதிகாரி வெளியிட்ட தகவல்
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் கடந்த வார இறுதியில் மக்களின் நடத்தை மிகவும் வருத்தமளிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார்.
நாளாந்த கோவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அதிகாரிகளால் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களின் துல்லியத்தன்மையில் சிக்கல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோவிட் தொற்றாளர்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்கள் எந்த அளவு உண்மையானது என்பதில் சிக்கல் நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட அதிகமான தொற்றாளர்கள் தினமும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் தேசிய புள்ளிவிபரங்களுக்கு வரும் போது திரிபுப்படுத்தும் நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படி தொற்று நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தாக மாறலாம்.
இவ்வாறான நிலைமையில், தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற தவறான எண்ணம் மக்களுக்குள் ஏற்பட்டுள்ளது.
இதன் பிரதிபலனாக மக்கள் கவனமின்றி, பாதுகாப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் இப்படியான நிலைமையை காணக் கூடியதாக இருந்தது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படலாம் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
-ஸ்டீபன்-

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
