ட்ரம்ப்பின் திடீர் போர் நிறுத்த உத்தரவு! ஈரான் மீதான தாக்குதல் மீண்டும் தொடருமென இஸ்ரேல் அறிவிப்பு
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பெப்ரவரி முதல் கடுமையாக தாக்கி வரும் நிலையில், ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை
இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்து வருகின்றது.
ஏவுகணை திட்டங்கள்
இந்த பின்னணியில், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். அவர்களின் ஏவுகணைத் திட்டங்களையும், அணுசக்தித் திட்டங்களையும் நாம் நசுக்கி வருகின்றோம்.

மேலும் ஹிஸ்புல்லா மீது கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகின்றோம். சில நாள்களுக்கு முன்பு, மேலும் இரண்டு அணு விஞ்ஞானிகளை கொன்றோம். மேலும், தாக்குதல் தொடரும். எந்தச் சூழ்நிலையிலும் நமது நலன்களை நாம் பாதுகாப்போம்.” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri