இரவோடு இரவாக குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இஸ்ரேலிய படைகள் பெய்ரூட்டின் ஒரு பகுதியாக இருக்கும் ஹஸ்மியே மற்றும் பாப்தாவின் எல்லையில் உள்ள ஒரு பகுதியில் குண்டுவீச்சு நடத்தியுள்ளது.
நாடு முழுவதும் விடியவிடிய தாக்குதல்கள் நடந்துள்ளதுடன், எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நடந்ததுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி தாக்குதலாக இருக்கலாம் என்பதை குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலை குறிவைத்து தாக்குதல்
இந்த தாக்குதல் ஹோட்டலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் உயிரிழப்புகளை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அரமவுனில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீதும், தெற்கே சதியாத் என்ற கிராமத்தில் மற்றொரு தாக்குதலும் நடத்தப்பட்டதில், ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரிய எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு நகரமான பால்பெக்கில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது ஒரு குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து தாக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை குறைந்தது நான்கு பேர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri