இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி!! எப்படி ஏமாற்றியது ஹமாஸ் (Video)
காசாவிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலை என்று கூறப்படுகின்ற Al-Shifa வைத்தியசாலை விவகாரம் என்பது இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்கொண்ட இரண்டாவது மிகப் பெரிய தோல்வி; என்றே கூறவேண்டி இருக்கின்றது.
ஓக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ஒருங்கிணைந்த அதிரடித்தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்பதைக் கணிக்கத் தவறியிருந்ததுதான் - இஸ்ரேலிய அண்மைக்கால வரலாற்றில் , அதனது புலனாய்வுப் பிரிவு பெற்ற மிகப் பெரிய தோல்வி என்று கூறப்படுகின்றது.
அதேபோன்று, காசாவின் Al-Shifa வைத்தியசாலையில் ஹமாசின் கட்டளைத் தளம் இருப்பதாக இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் கூறிவந்தபோதும், அப்படி எதுவுமே அந்த வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்படாததானது, இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவுகள் அண்மைக்காலத்தில் பெற்றுள்ள இரண்டாவது தோல்வி என்று கூறலாம்.
இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு எப்படி இந்த தோல்வி ஏற்பட்டது? எங்கே சறுக்கின இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவுகள்? இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இன்றைய இந்த ‘நிதர்சனம்’ ஒளியாவணம்: