இஸ்ரேலில் பதற்றம்! உணவக பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்கள்!
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் டவுன்டவுனில் நேற்று இரவு உணவகங்கள் உட்பட்ட இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்.
எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் அந்த நாட்டில் பதற்ற சூழ்நிலை தோன்றியுள்ளது.
டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் அவசர சேவை மையம் தகவல் தெரிவித்தது.
புனித இஸ்லாமிய மாதமான ரமழானுக்கு முன்பிருந்து பாலஸ்தீனிய நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றைய சம்பவம் மேலும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
