உச்சம் தொட்ட இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு! 3500 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலியர்களின் அதிரடி ஆட்டம்!!
இஸ்ரேலியர்களின் புலனாய்வுப் பிரிவான மொசாட் மேற்கொண்ட அதிரடி ஆட்டங்கள் என்று வரலாற்றில் ஏராளம் இருக்கின்றன.
உலகின் புலனாய்வு நடவடிக்கைகள் வரலாற்றில் அதி உச்சம் தொட்ட நடவடிக்கை என்று இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு மிக அண்மையில் மேற்கொண்ட ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான பேஜர் தாக்குதலை வியந்து கூறுகின்றார்கள் போரியல் ஆய்வாளர்கள்.
புலனாய்வு உலகையே வியப்பில் ஆழ்த்தியிருந்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவின் அந்த பேஜர் தாக்குதலை அவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்பதுபற்றி இஸ்ரேலின் இளைப்பாறிய இரண்டு மொசாட் உறுப்பினர்கள் இஸ்ரேலின் தொலைக்காட்சி ஒன்றுக் வழங்கிய செவ்வி - தற்பொழுது உலக ஊடகப்பரப்பில் பிரதான பேசுபொருளாகிவருகின்றது.
எதிரியை ஏமாற்றி அந்த எதிரியின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி- காத்திருந்து- சரியான சந்தர்ப்பத்தில் அந்த எதிரியை அழிப்பது என்பது இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவினருக்கு- கைவந்த ஒரு கலை.
இந்தக் கலையை இஸ்ரேலியர்கள் இன்றைக்குத்தான் செய்தார்களா என்றால்- இல்லை. இந்த தந்திரோபாயத்தை பல நூற்றாண்டுகளாகவே யூதர்கள் செய்துவருகின்றார்கள்.
குறிப்பாக- இன்றைக்கு சுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய போர் வீரனான 'ஏகூத்' என்பவன், இஸ்ரேலியர்களைத் துன்புறுத்திய தமது எதிரிகளை முறிடிப்பதற்காக மேற்கொண்ட ஒருவித அதிரடி ஊடறுப்புத் தாக்குதலைக் கூறலாம்.
வரலாற்றில் இஸ்ரேலியர்கள் மேற்கொண்ட சில உளவு நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: