காசாவின் நிலத்தடி சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
கடந்த காலங்களில் பணயக்கைதிகளை சிறைவைத்திருந்த காசாவின் சுரங்கப்பாதையை இஸ்ரேலிய வீரர்கள் கண்டுபிடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் உள்ள ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் ஹமாஸால் கடத்தப்பட்ட சுமார் 20 பணயக்கைதிகளை சிறைவைத்திருந்த சுரங்கப்பாதையையே இஸ்ரேலியப் படைகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏழு நாள் போர் நிறுத்தம்
நவம்பரில் ஏழு நாள் போர் நிறுத்தத்தின் போது, ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் பலர் இங்கு பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு சிறுவர்கள் வரைந்த ஓவியங்களையும் இஸ்ரேலிய படையினர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.
உலோகக் கம்பிகளுக்குப் பின்னால் ஐந்து குறுகிய அறைகள், கழிப்பறைகள், மெத்தைகள் மற்றும் நவம்பர் மாதப் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட ஒரு குழந்தை பணயக்கைதியின் வரைபடங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், நிலத்தடி சுரங்கப்பாதையின் புகைப்படங்களையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.
காசாவில் கான் யூனிஸுக்கு தெற்கே உள்ள ஹமாஸ் உறுப்பினரின் வீட்டில் இந்த தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஹகாரி கூறியுள்ளார்.
இந்த நகரம் சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலின் தரைப்படை தாக்குதலின் மையமாக உள்ளதுடன், இராணுவ வீரர்கள் சுரங்கப்பாதையில் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகளை என்கவுன்டர் செய்ததாகவும் ஹகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
