ஹிஸ்புல்லாவை இலக்கு வைத்து லெபனானானை தாக்கிய இஸ்ரேலிய ஏவுகணைகள்
ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் லெபனானின் தஹியே பகுதியில் இஸ்ரேல் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல்- லெபனான் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
தற்போது இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா ஆதிக்கம்
மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், மிகப்பெரிய அளவில் புகை மண்டலம் வெளிப்பட்டதாக பிராந்திய மக்கள் விளக்கமளித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா டிரோன்களை மறைத்து வைத்திருந்த இடத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் "இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அமைதி இல்லாதவரை, பெய்ரூட்டிற்கும் அமைதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |