மனிதாபிமான உதவி வழங்கச் சென்றவரை கடத்திய இஸ்ரேலிய இராணுவம்
சர்வதேச கடல் பகுதியில் காசாவை நோக்கிச் சென்ற மனிதாபிமான உதவிக்கப்பலில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கடத்தப்பட்ட ஸ்பெயின்-பாலஸ்தீன சமூக ஆர்வலரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை பிடிபட்ட அந்தக் கப்பலில் இருந்த சைப் அபு கெஷெக் என்ற ஆர்வலரை இஸ்ரேலிய இராணுவம் சிறைபிடித்த நிலையில், இஸ்ரேலிய நீதிமன்றம் அவரது காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் - மும்முனை போட்டியால் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறுமா..!
ஸ்பெயின் முன்வைத்துள்ள கோரிக்கை
இந்தச் சம்பவம் குறித்து ஏ.எஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சகம் அனுப்பியுள்ள குறிப்பில், "ஸ்பெயின் குடிமகன் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவரை இஸ்ரேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலிய நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, டெல் அவிவ் நகரில் உள்ள ஸ்பெயின் தூதுவர் சைப் அபு கெஷெக்குடன் நேரில் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் சைப் அபு கெஷெக் மற்றும் பிரேசிலைச் சேர்ந்த தியாகோ அவிலா (Thiago Avila) ஆகிய இருவரின் காவலை நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மனிதாபிமான உதவிகளுடன் சென்ற கப்பல் மறிக்கப்பட்டதும், அதில் இருந்த சர்வதேச ஆர்வலர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதும் தற்போது சர்வதேச அளவில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.