இன்னும் சில நாட்களே..! குறிவைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இலக்குகள் - இஸ்ரேல் அதிரடி
ஈரானில் 'உயர் முன்னுரிமை' என வகைப்படுத்தப்பட்ட அனைத்து இலக்குகளையும் தாக்குவதற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) இன்னும் சில நாட்களே உள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் இன்று(29) தெரிவித்துள்ளார்.
இலக்குகள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
முக்கிய இலக்குகள்
"அவை பாலிஸ்டிக் ஏவுகணைகள், (ஆயுத) உற்பத்தி, அணுசக்தி, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் என இருக்கலாம்," என்று IDF-இன் சர்வதேச செய்தித் தொடர்பாளர் நடாவ் ஷோஷானி கூறினார்.

ஒவ்வொரு குழுவிலும், 'அத்தியாவசியம், முக்கியம் மற்றும் கூடுதல்' என வெவ்வேறு பிரிவுகள் உள்ளன என்று விளக்கினார்.
மேலும், இன்னும் சில நாட்களில், "உற்பத்தி சார்ந்த உயர் முன்னுரிமை இலக்குகளுக்கு எதிரான பணியை எங்களால் முடிக்க முடியும். அதற்காக நாங்கள் எங்கள் இலக்குகளைத் தீர்த்துவிட்டோம் என்று அர்த்தமல்ல... ஆனால், நாங்கள் உயர் முன்னுரிமை எனக் குறித்தவற்றில் மிக முக்கியமானவற்றைப் பற்றிப் பேசினால், அவற்றை இன்னும் சில நாட்களுக்குள் எங்களால் அடைய முடியும்.
"செயல்பாட்டுச் சூழல்கள்" மாறக்கூடும் என்பதால், அதற்கான விரிவான காலக்கெடுவைக் கூற ஷோஷானி தயக்கம் காட்டினார்.
அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள்
கடந்த வார இறுதியில், ஈரானில் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு எஃகு ஆலை உட்பட இரண்டு எஃகு ஆலைகளையும், புளூட்டோனியத்தின் முக்கிய உற்பத்தித் தளங்களைக் கொண்ட அராக் நகரில் உள்ள ஒரு கனநீர் ஆலையையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தாக்கியதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத் தாக்குதலின்போதும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அந்தக் கனநீர் ஆலையைத் தாக்கியதாகவும், ஆனால் "அதை மீண்டும் கட்டும் முயற்சிகளை உளவுத்துறை கண்டறிந்தது" என்றும் ஷோஷானி கூறினார்.
ஈரானின் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள், இராணுவ இலக்குகளை அழித்ததோடு மட்டுமல்லாமல், ஈரானில் குறைந்தது 1,900 பேரைக் கொன்றுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மருத்துவ வசதிகள் மற்றும் பள்ளிகள் உட்பட பல பொது உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam