ஐ.நா துருப்புக்களை இலக்கு வைத்த இஸ்ரேலிய படை: பிரான்ஸ் கடும் கண்டனம்
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.நா துருப்புக்கள் காயமடைந்தமைக்கு பிரான்ஸும், இத்தாலியும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இதன் விளைவாக UNIFIL தலைமையகத்தில்( United Nations Interim Force In Lebanon) இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
UNIFIL இன் பாதுகாப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் தாம் கண்டிப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
அமைதி காக்கும் படை
இஸ்ரேலிய அதிகாரிகளின் விளக்கங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும், அமைதி காக்கும் படையினரின் பாதுகாப்பு என்பது மோதலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் ஒரு கடமையாகும் எனவும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் போர் குற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய காரணி எனவும் பிரான்ஸ் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |