காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் பேச்சாளர் பலி!
இஸ்ரேலிய படைகள் காசா மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்தெல்-லத்தீப் அல்-கனோவா (Abdel-Latif al-Qanoua) கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் இன்று (27) அதிகாலை ஜபாலியா அல்-பலாத் பகுதியில் அல்-கனோவாவின் கூடாரத்தைத் தாக்கியபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காசாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இதேவேளை, இஸ்ரேல் தொடர்ந்தும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, துறைமுக நகரமான லடாகியாவை அண்டிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் 2023 முதல் காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் கிட்டத்தட்ட 50,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 13,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
