ரமழான் முதல் நாளில் 100 பாலஸ்தீனியர்களை பலியாக்கிய இஸ்ரேல் இராணுவம்
காசா பதற்ற நிலைக்கு மத்தியில் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புனித ரமழான் நோன்பை பாலஸ்தீனியர்கள் ஆரம்பித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட 67 பேரின் உடல்கள் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 31,112 க்கும் அதிகமாக இருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குடிமக்கள் மற்றும் போராளிகளை வேறுபடுத்தவில்லை எனவும் ஆனால் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இஸ்ரேலியப் படைகள்
இதற்கிடையில், முஸ்லிம்களின் நோன்பு மாதமான இரமலான் மாதத்தின் முதல் நாளில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஜெருசலேம் புனித தலத்தில் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
நேற்று திங்கட்கிழமை நண்பகல் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் உள்ள கூட்டம் முந்தைய ஆண்டுகளை விட மிகவும் சிறியதாக காணப்பட்டுள்ளது.
சில நுழைவாயில்களில் இஸ்ரேலியப் படைகள் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி சில வழிபாட்டாளர்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
அல்-அக்ஸா மசூதி இஸ்லாமியத்தின் மூன்றாவது புனித தலமாகும். இது ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இது யூதர்களுக்கும் இது மிகவும் புனிதமான இடமாகும்.
அவர்கள் அதை கோயில் மவுண்ட் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது பழங்காலத்தில் இரண்டு யூத கோவில்களின் இருப்பிடமாக இருந்தது என்று யூதர்கள் கூறுகிறார்கள்.
இஸ்ரேல் மறுப்பு
இந்த மசூதி நீண்ட காலமாக இஸ்ரேல்-பாலஸ்தீனமோதலில் ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் இஸ்ரேல் அதிக எண்ணிக்கையிலான யூதர்களை வளாகத்திற்குச் செல்ல அனுமதித்ததால் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
இது பாலஸ்தீனத்தை இஸ்ரேல் கையகப்படுத்த அல்லது பிரித்து வைக்க விரும்புகிறது என்ற அச்சத்தை தூண்டியுள்ளது. எனினும் இஸ்ரேலின் அரசாங்கம், அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது.
காசாவில் போர் மூண்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு சாதாரண அணுகலை அனுமதிப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன்படி காசா பகுதியில் உதவித் தொகையை எகிப்து தீவிரப்படுத்தியுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |