ஈரானுக்கு எச்சரிக்கை! கூட்டுப் பயிற்சியில் இறங்கிய இஸ்ரேல் - அமெரிக்க விமானங்கள்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டுத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஈரானை எச்சரிக்கும் விதமான மூலோபாய நகர்வுகள் காரணமாக இந்த அச்சநிலை தோன்றியுள்ளது.
இதன்படி இஸ்ரேலிய விமானப்படை அமெரிக்க விமானப்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குண்டுவீச்சு தாக்குதல்
இந்தப் பயிற்சியின் போது, இஸ்ரேலிய F-35i மற்றும் F-15i விமானங்கள் அமெரிக்க B-52 மூலோபாய குண்டுவீச்சு விமானத்துடன் பறந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
மேலும் அந்த விமானம் பல்வேறு பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்காக இரு இராணுவங்களுக்கிடையில் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை" பயிற்சி செய்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கொண்டுள்ள எதிர்ப்பு நிலை தொடர்பான ஊகம் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க Cineulagam

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam
