இஸ்ரேல் காசா யுத்தம்: இலங்கைக்கு பாரிய தாக்கம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான இந்த போர் இலங்கையிலும் பாரிய தாக்கத்தினைச் செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தின் காரணமாக இலங்கைக்கு நிச்சயமாக தாக்கங்கள் ஏற்படக் கூடும். இந்த நிலை எமது எரிசக்தி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனிடையே பாலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக எமது நாட்டுத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகத் தெரியவருகின்றது. இது இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகும்.
மறுபுறத்தில் இந்த விவசாய பண்ணைகளில் இருந்த பாலஸ்தீனர்களுக்கு இன்று வாழ்வதற்கு வழிகள் இல்லை. இதன் மூலம் மேலும் மோதல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
20 வருடங்களாகத் திறந்த சிறைகூடமாகவே காசா இருந்து வருகின்றது. அன்று அந்த மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கவனிக்கப்பட்டதன் ஊடாக வன்முறையில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றானது.
இந்த வன்முறை, குரோதம், வெறுப்புக்களை ஏற்படுத்துவது ஏகாதிபத்தியவாதிகளாகும். இரண்டு சமத்துவமற்ற சக்திகளுக்கிடையிலான யுத்தத்தில் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் பின்னால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே உள்ளன. அவர்கள் தமது வீட்டோ அதிகாரத்தை ஐக்கிய நாடுகளின் பிரேரணைக்கு எதிராகப் பயன்படுத்தியதே இந்த மனித இனப் படுகொலை இந்தளவுக்கு மிக மோசமாக இடம்பெறக் காரணமாகியது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |