இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று நிறுவனங்களின் பரிந்துரை நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) உறுதிப்படுத்தியுள்ளது.
“இஸ்ரேலில் வேலை தேடும் சாத்தியமுள்ள பணியாளர்கள் வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்திடம் (PIBA) அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எந்தவொரு விசா நடைமுறையையும் செயற்படுத்துவதற்கு இந்த மூன்று நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளையும் அனுமதியையும் பெற வேண்டும்” என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
குறுக்கு வழியில் செயற்படும் அதிகாரிகள்
மேலும் அவர், அங்கீகரிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் பரிந்துரைகள் இன்றி அனுமதி வழங்க உள்ளூராட்சி அதிகாரிகள் சிலர் குறுக்கு வழியில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுமட்டுமன்றி 100க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை தற்போது பெற்றுள்ளதாகவும், அதில் 15 விசா அங்கீகரிக்கப்பட்ட கோப்புகள் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam