பேச்சுவார்த்தை மூலம் தோல்வியை மறைக்க இஸ்ரேல் முயற்சி: ஹிஸ்புல்லா சாடல்
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான போரில் சந்தித்த தோல்வியை ஈடுகட்டவே, அமெரிக்காவில் லெபனானுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் ஃபழ்லல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் அதிகாரிகள் தங்கள் தற்போதைய செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் லெபனான் ஏன் இல்லை?
தெற்கு லெபனானில் இருந்து லெபனான் இராணுவத்தை அதிகாரிகள் வாபஸ் பெற்றுள்ளமையானது, அப்பகுதியை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளதாகவும், எதிரி நாடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் லெபனானை உள்ளடக்காமல் தவிர்த்தது இஸ்ரேலின் கோரிக்கையாகும்.
அத்துடன், லெபனான் அரசாங்கத்தின் பலவீனமான நிலைப்பாட்டைப் பயன்படுத்தியே அமெரிக்கா இத்தகைய பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டுள்ளதாகவும் ஃபழ்லல்லாஹ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri