போர் நிறுத்த கொண்டாட்டத்தின் போது காசாவில் இஸ்ரேல் படைகளின் திடீர் நடவடிக்கை
ஹமாஸ் தரப்புடனான போர் நிறுத்தமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் என ஒப்புக்கொண்ட போதிலும், இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் பல தரப்பினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய ஒரு கொடிய தாக்குதலில் 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
போர் நிறுத்த அறிவிப்பு
“நாங்கள் போர் நிறுத்த அறிவிப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய போர் விமானங்கள் எங்களை இலக்குவைத்தன.
எமது சகோதரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து சிலரை மீட்டெடுத்துள்ளோம்.
வெடிப்பு சத்தம்
நான் தூங்கப் போகும் போது, ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. கட்டிடம் முழுவதும் தரைமட்டமாகி இருந்தது.
இடிபாடுகள், தூசி மற்றும் புகை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
இடிபாடுகளுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டது.மேலும், சில சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் எங்களுடன் உதவிக்கு விரைந்தனர்.
பெரும் முயற்சியோடு இறந்தவர்களையும் சில உயிர் பிழைத்தவர்களையும் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே எடுத்தோம்.” என வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |