இலங்கையில் உள்ள இஸ்ரேலின் சபாத் இல்லங்கள்! வெளியான புதிய தகவல்
இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் இந்த குழு கூடியபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அதன்போது, தேசிய பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், இந்த மத மையங்களின் சட்டப்பூர்வ நிலை மற்றும் ஒழுங்குமுறை குறித்து வெளிவிவகார மற்றும் சுற்றுலா துறை அமைச்சின் அதிகாரிகளிடம், அந்த குழு கேள்வி எழுப்பியது.
கண்காணிப்பு
அதன்போது, இரண்டு சபாத் இல்லங்களின் பதிவை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அத்துடன், அவற்றின் செயற்பாடுகளை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிப்பது குறித்து கலந்துரையாடல் நடந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri