நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக மாத்திரமே இருப்பதாக இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம்(IDI) தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் வெளியிட்ட புதிய கணக்கெடுப்பு ஒன்றின் படியே இந்த விடயம் தெரியவந்துள்ளது. காசா உடனான இஸ்ரேலின் போர் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலிய சமூகத்திற்குள் ஏற்பட்டு வரும் பிளவுகளை இது வெளிப்படுத்துகின்றது.
அத்துடன், இஸ்ரேலின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கணிசமாக நம்பிக்கையை மக்கள் கொண்டிருப்பதாகவும் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகின்றது.
நம்பிக்கை மதிப்பீடு
இதன்படி, இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி இயல் ஜமீர் 68.5 சதவீத நம்பிக்கை மதிப்பீட்டுடன் முதலிடத்திலும், மொசாட் இயக்குனர் டேவிட் பார்னியா 67 சதவீத நம்பிக்கை மதிப்பீட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மீது 35 சதவீதம் பேர் மட்டுமே நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, குறித்த ஆய்வு, ஈரானுடனான போரின் இறுதி நாட்களில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |