வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட நேதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு (வயது 72) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு உடல்நல குறைவு காரணமாக இஸ்ரேலின் ஷீபா வைத்தியசாலையில் கடந்த வாரம் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பியிருந்தார்.
இதன் போது நேற்றையதினம்(27.07.2023) மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய கண்காணிப்பு கருவி
உடல்நலக்குறைவு காரணமாக, உடனடியாக வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் அவர், நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் “எந்தவித சிக்கலும் இல்லாமல் அறுவைசிகிச்சை இடம்பெற்றுள்ளது. எவ்வித உயிராபத்தும் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது உடலில் இதய கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
