இஸ்ரேல்–லெபனான் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் – லெபனான் ஜனாதிபதி
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய மோதல், 2024 அமைதியமைப்பு ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைபிடித்திருந்தால் தவிர்த்திருக்கலாம் என லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவொன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் படையினர் தெற்கு பகுதிகளில் இருந்து விலக வேண்டும் என்ற அழைப்புகளை ஏற்று, 2024 ஒப்பந்தத்தை பின்பற்றியிருந்தால் இந்த போர் ஏற்பட்டிருக்காது” என கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் அமைப்புடன் இஸ்ரேல் மேற்கொண்ட 2024 போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ,ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என லெபனான் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

தலைநகர் பெய்ரூத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், பாலங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த பாலங்களை குண்டுவீசி அழிப்பது, லிடானி ஆற்றின் தெற்குப் பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஹிஸ்புல்லா இயக்கத்தை எதிர்த்து நடவடிக்கைகள் தொடரும் எனவும், லிடானி ஆற்றுப் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதமும் ஏவுகணைகளும் உள்ள இடங்களில் குடியிருப்புகளுக்கு இடமில்லை எனவும் அந்த பகுதிகளில் இஸ்ரேல் படைகள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.