இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்: காசாவின் பிரபல விஞ்ஞானி குடும்பத்துடன் உயிரிழப்பு
இஸ்ரேல் விமானப்படை நேற்று சனிக்கிழமை நடத்திய விமானத்தாக்குதலில் காசாவின் பிரபல விஞ்ஞானி அவரது குடும்பத்துடன் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் சுஃபியான் தாயே மற்றும் அவரது முழு குடும்பமுமே விமானத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
பேராசிரியர் தாயே ஒரு முக்கிய பாலஸ்தீனிய விஞ்ஞானி மற்றும் முன்னணி கல்வி நிறுவனமான காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவராவார்.
பாலஸ்தீனிய விஞ்ஞானி
அக்டோபர் 7க்குப் பிறகு இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட முதல் கல்வியாளர் பாலஸ்தீனிய விஞ்ஞானி அல்ல. எவ்வாறாயினும், அவரது கொலை, பிராந்தியம் முழுவதும் உள்ள கல்வி சமுகத்தின் மத்தியில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
திறமையான விஞ்ஞானி மற்றும் அன்பான குடும்ப மனிதன் இயற்பியல் மற்றும் பயன்பாட்டு கணிதத்தில் ஒரு முன்னணி ஆராய்ச்சியாளராக இருந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், குட்ஸ் நியூஸ் நெட்வேர்க்கின் படி, அவர் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களில் இரண்டு சதவீதத்தில் ஒருவராக வகைப்படுத்தப்பட்டார்.
உண்மையில், தயேயின் ஆராய்ச்சி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) உட்பட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காசா மீது மீண்டும் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்: நூற்றுக்கணக்கில் பலியான மக்கள் - நிராகரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |