ஹமாஸ் தலைவர்களை குறி வைக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலிய (Israel) வான்வழித் தாக்குதலில் தெற்கு காசா பகுதியில் உள்ள தங்கள் அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தெற்கு காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்கள் சலா அல்-பர்தவீல் மற்றும் அவரது மனைவி என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய பணயக்கைதிகள்
இதற்கிடையில், காசா பகுதியில் வான், கடல் மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்று இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
🚨BREAKING: The Israeli army has killed Senior Hamas political bureau member and parliamentarian Salah Al-Bardawil and his wife in an airstrike targeting tents sheltering displaced families west of Khan Younis, southern Gaza Strip. pic.twitter.com/4EplR2hvC7
— Gaza Notifications (@gazanotice) March 22, 2025
அதன்படி, காசா பகுதியில் உள்ள துருக்கிய-பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலையும் நடத்தியுள்ளது.
புற்றுநோய் நோயாளிகளுக்கு குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாகக் கருதப்படுகிறது.
காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
