இஸ்ரேலின் கவனயீனத்தால் பறிபோன அப்பாவி உயிர்கள்
காசாவில் உணவு விநியோகித்துக் கொண்டிருந்த அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மற்றுமொரு தவறு
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. நான் இதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இது குறித்து நாங்கள் முழுமையாக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற மற்றுமொரு தவறு நடக்காமலிருக்க மிகுந்த அவதானத்துடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri