இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்த நாடு
காசாவில் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கினை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் காசாவில் 21,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இனப்படுகொலை
இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா அளித்த விண்ணப்பத்தில், “காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பாலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை' என குறிப்பிட்டுள்ளது.
மேலும், “காசாவில் பாலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களின் உடல் ரீதியான அழிவைக் கொண்டு வருவதற்கா கணக்கிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது ஆகியவை கேள்விக்குரிய செயல்களில் அடங்கும்' எனவும் குறித்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உறுப்பு நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டுள்ளதோடு பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என பல மனித உரிமை அமைப்புகள் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
